கல்யாணத்தில் மணமகன் இழவு வீட்டில் பிணம்
பார்த்திருக்க தின்று முழித்திருக்க கை
துடைக்கும்
வெள்ளித்திரை பிரும்மாக்கள் ஏரி வேலைக்கு
போனால் என்ன - சோத்துக்கு வழியில்லை
கலைத் தாகமென்றுச் சும்மா புலம்பித் திரிவது
ஒட்டுத்திண்ணை வாசிகள் மேய்த்தால் மதனியைமேய்ப்பார்கள்
இல்லையென்றால் பரதேசம் போவார்கள்
காடு வீடிழந்த குடியானவன் ரோட்டுக்கடையில்
இவன் திங்க பிட்டுச்சுட்டு விற்கிறான்
தொட்டுக்கொள்ள எண்ணையில் சுட்ட கறிகோழியும்
கையில் பணமிருக்கிறதாவென்றால்
பணமிருந்த கையிருக்கிறதென்பது
மண்டையிலிருக்கும் மயிரும் சொந்தமில்லை
எடுப்புச்சாப்பாட்டுக்கு எகத்தாளம் கொஞ்சமல்ல
மிக அதிகம்
இளக்காரம் கண்டு பூலுக்கு பூண் கட்டச்சொல்வது
ஈரைப்பேன் ஆக்குவது பேனை பெருமாளாக்குவது
எந்நேரமும் அடுத்தவன் வலப்பையை சுரண்டுகிறது
தன் காலில் பூ போட்டுக்கொள்வது
வராத நாயை கயிறு போட்டு இழுப்பது
கைகொடுத்துக்கொண்டே கடையாணி
பிடுங்குவது
ஈரத்துணி போட்டு கழுத்தை அறுப்பது
அண்டப்புளுகு ஆகாசப்புளுகு பச்சைச்சிரிப்பு
நீலிக்கண்ணீர்
அவனியெங்கும் மணக்குது கனவுபட்டறை நாத்தம்
கதவச்சாத்துங்க ஊசக்காத்தடிக்கிது உசுருக்கே
கேடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக